×

தஞ்சை நெட்டிவேலை, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு : 1000 ஆண்டுகள் பாரம்பரியத்திற்கு கிடைத்தது பெருமை

தஞ்சை : ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க தஞ்சை நெட்டிவேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஓரிடத்தில் தயாரிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் அதன் பெருமையை விளக்கும் விதமாக அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த பொருளை அந்த இடத்தில் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதோடு அதற்கான அங்கீகாரமும் உலக அளவில் சென்றடையும். இதுவரை தமிழகத்தில் தஞ்சை கலைத்தட்டுகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, காஞ்சிபுரப் பட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது.

அந்த வரிசையில் தஞ்சையில் செய்யப்படும் பழம்பெருமை வாய்ந்த பாரம்பரிய மிக்க நெட்டி மாலை மற்றும் வேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளாக ஆற்றங்கரைகளில் இயற்கையாக வளரும் நெட்டியில் தயாரிக்கப்படும் பல்வேறு கலை வேலைப்பாடுகள் பெரும் புகழ்பெற்றவையாகும். இதே போல 250 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கும் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் மர வேலைப்பாடு மிகவும் புகழ் பெற்றது. இதன் மூலம் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Thanjavu Nettiveli ,Arumbavoor , Tanjore, Nettiveli, Arumbavoor, Woodpeckers, Geological Code, 1000, Years, Heritage
× RELATED கொலை வழக்கில் ஆஜராகாததால்...