×

கொரோனா ஊரடங்கால் தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கு சுமார் ரூ.1200 கோடி வருவாய் இழப்பு!!

சென்னை : கொரோனா ஊரடங்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கு சுமார் ரூ.1200 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளொன்றுக்கு ரூ.21,500 பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன. அவற்றில் 1 கோடியே 60 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். பேருந்து கட்டணமாக நாளொன்றுக்கு ரூ.25 கோடி வசூலாகி வந்தது. ஆனால் ஊரடங்கால் போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தமாக ரூ.1200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போக்குவரத்துத் துறையின் மொத்த வருவாய் 53% அதாவது 340 கோடி ரூபாய் சம்பளப் பணமாகவும் ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது.அதே நேரம் ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகை மற்றும் உதிர்வு தொகை உள்ளிட்ட பணப் பயன்கள் வழங்கப்படாமல் உள்ளது. சாலை விபத்தில் இறப்போருக்கு ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை இழப்பீடு தரப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் சில வாரங்களுக்கு பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் போக்குவரத்து கழகங்களின் நட்டத்தை ஈடுகட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Tags : Tamil Nadu Transport Corporation ,Coronation Curtain Loss ,Tamil Nadu Transport Corporations , Corona, Curfew, Tamil Nadu, Transport, Corporations, Rs
× RELATED வார இறுதி நாள் மற்றும் சுபமுகூர்த்த...