×

மாந்தோப்பில் காட்டுமாடு சாவு: வனத்துறை அலுவலர்கள் ஆய்வு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, கரடிபொட்டல் வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இப்பகுதிக்கு அருகில் உள்ள தனியார் மாந்தோப்பில் காட்டுமாடு ஒன்று மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தது. இது குறித்து தகவலறிந்த தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறை அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, காட்டுமாடு இறந்தது குறித்து மாந்தோப்பு விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். இறந்த மாட்டை மருத்துவ பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர், ‘சினையாக இருந்த காட்டுமாடு, கன்றை ஈன்றெடுக்க முடியாமல் இறந்திருக்கலாம் என தெரிவித்தார். இதையடுத்து, காட்டு மாட்டை அதே பகுதியில் புதைத்தனர்.



Tags : Wildfire death ,Forest officials ,Mantop , Wildfire death, Mantop, Forest officials ,study
× RELATED மாமல்லபுரம் அருகே பரபரப்பு மாந்தோப்பில் திடீர் தீ: போலீசார் விசாரணை