×

மூலவைகை ஆற்றில் தடுப்பணை சேதம்: விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம்

வருசநாடு: மயிலாடும்பாறையில், மூலவைகை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துள்ளதால், விளைநிலங்ளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடும்பாறையில் மூலவைகை ஆற்றின் குறுக்கே, 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தடுப்பணை கட்டப்பட்டது. தரமற்ற பணியால் தடுப்பணை பக்கவாட்டு தடுப்புச்சுவர் ஒருபுறம் சேதமடைந்தது. இந்நிலையில், கடந்தாண்டு மூலவைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், தடுப்பணை பக்கவாட்டு தடுப்புச்சுவர் மேலும் சேதமடைந்தது. இதனால், ஆற்று நீர் அருகில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்தது.

விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி, தோட்டத்திற்குள் தண்ணீர் செல்லாமல் தடுத்தனர். இந்த நிலையில் அடுத்து மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தடுப்பணையின் பக்கவாட்டு தடுப்புச்சுவர் முழுமையாக சேதமடைவதுடன் தோட்டத்திற்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : river ,farmland ,Herbivore River , Blockage , herbivore river
× RELATED நெல்லை அருகே கோயிலுக்கு வந்த போது பரிதாபம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி