×

துபாயிலிருந்து 2 சிறப்பு விமானங்களில் 359 தமிழர்கள் சென்னை வந்தனர்

சென்னை: கொரோனாவால் துபாயில் சிக்கி தவித்த 359 தமிழர்கள் சென்னை வந்தனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் வெளிநாடு சென்ற இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வர முடிவில்லை. அவர்களை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரவேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.அதன்பேரில் சிறப்பு விமானங்கள் மூலம் கடந்த 7ம் தேதியிலிருந்து வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்து வருகிறது. அதைப்போல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களும் சென்னை, திருச்சிக்கு அழைத்து வருகின்றனர்.கடந்த 8ம் தேதி துபாயிலிருந்து 2 விமானங்களில் 359 தமிழர்கள் சென்னை அழைத்துவரப்பட்டனர்.

அவர்கள் தனியார் கல்லூரி, ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 9ம் தேதி மலேசியாவிலிருந்து தமிழர்கள் தனி விமானத்தில் திருச்சி அழைத்து வரப்பட்டனா். நேற்று முன் தினம் இரவு குவைத்திலிருந்து 4 குழந்தைகள் உட்பட 171 பேர் ஏர் இந்தியா எகஸ்பிரஸ் தனி விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமானநிலையத்தில் அவர்களை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு அவர்களை சமூக இடைவெளி விட்டு வரிசையில் நிற்கவைத்து மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டன.  மேலும் நேற்று இரவு 9.30 மணிக்கு மலேசியாவிலிருந்து சுமார் 180 தமிழர்களுடன் மற்றோரு ஏர் இந்தியா சிறப்பு தனி விமானம் சென்னைக்கு வந்தது.

Tags : Tamils ,flights ,Dubai ,Chennai , Dubai, special flights, 359 Tamils, Chennai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...