×

ஊரடங்கு நேரத்தில் கைவரிசை 200 வழக்குகளில் தொடர்புடைய பலே கொள்ளையன் சிக்கினான்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி குமரன் நகரில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஊராடங்கால் மூட்பட்டு இருந்தது. கடந்த 1ம் தேதி இந்த நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த விலை உயர்ந்த பிராஸ் மற்றும் காப்பர்களை கொள்ளைபோனது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் கமலகண்ணன் (51) என்பவர், தனது கூட்டாளி ரமேஷ் (50) என்பவருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, சிறு வயதில் இருந்து வீடுகளில் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்து வந்த கமலகண்ணன், கடந்த 5 வருடங்களாகவே இரும்பு சம்மந்தப்பட்ட நிறுவனகளில் மட்டுமே தனது கைவரிசையை காட்டி வந்ததும் தெரிந்தது.

இவர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையடிப்பதில் பலே கிள்ளாடியான கமலகண்ணனின் நண்பரான  சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், கொள்ளையடிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு இந்த கம்பெனியின் எதிரே சாலையில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட கமலகண்ணன் குடிப்பதற்கு அங்கு சென்று தண்ணீர் கேட்பதுபோல் நடித்து நோட்டமிட்டதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, 2.5 லட்சம் மதிப்பிலான பிராஸ் மற்றும் காப்பர்களை கைப்பற்றினர்.

Tags : many ,curfew ,robber , Curfew, 200 cases, robbery
× RELATED கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம்...