×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துமனையில் வியாசர்பாடியை சேர்ந்த நபர் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, கடந்த 2 நாட்களாக சளி, இருமல் இருந்ததால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இவரது மனைவி, குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த சுகாதார ஆய்வாளரின் கீழ் 40 ஊழியர்கள் பணிபுரிவதால் அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலந்தூர்: கிண்டி மடுவின்கரை பகுதியில் காய்கறி கடை நடத்தி வரும் நபர், கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்ததால், சமீபத்தில் இவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் 2 குழந்தைகள் உள்பட 4 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. மேலும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரானா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநகராடசி சுகாதார பிரிவினர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அந்த பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

மடிப்பாக்கம்: மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பொதுப்பணி துறை அதிகாரி ஒருவருக்கு சமீபத்தில் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு நடத்திய சோதனையில் 4 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புழல்:  புழல் தியாகி சின்னச்சாமி தெருவை சேர்ந்த 32 வயது காவலர், எழும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் தியாகி சின்னச்சாமி தெரு, ஸ்டீபன் திருமாறன் தெரு ஆகியவற்றுக்கு சீல் வைத்து, கண்காணித்து வருகின்றனர்.

எஸ்ஐ வீடு திரும்பினார்: சென்னை அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளருக்கு கடந்த 1ம் தேதி, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவர், உடல்நலம் முன்னேற்றமடைந்து நேற்று வீடு திரும்பினார். அண்ணா நகர் மாவட்ட நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் லோகநாதன் மற்றும் போலீசார் அவரை வரவேற்று உடல் நலம் விசாரித்தனர். அப்பகுதி மக்கள் கைகளை தட்டி இவரை வரவேற்றனர்.

டாக்டருக்கும் நோய் தொற்று
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 32வது வார்டு லட்சுமிபுரம் பவானி நகர் பகுதியை சேர்ந்த 30 வயது நபர், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சமீபத்தில் பணியாற்றினார். இவருக்கு நடத்திய பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவரை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

Tags : Stanley State Hospital ,health inspector ,Corona , Stanley Government Hospital, Health Inspector, Corona
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...