×

தென் ஆப்பிரிக்காவில் இருந்து 30 மணி நேரம் பறந்து ஏர் ஆம்புலன்சில் சென்னை வந்த கேன்சர் நோயாளி

சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த விஜய் யாசம் (43), தென் ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இவர், தென் ஆப்பிரிக்காவில் குடும்பத்துடன் இந்தியா வர விரும்பினார். ஆனால், ஊரடங்கு காரணமாக வரமுடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், வங்கி அதிகாரிகள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் பேசியதை தொடர்ந்து, ஏர்-அம்புலன்ஸ் விமானத்தில் அவரை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஏர்-ஆம்புலன்ஸ் நேற்று முன்தினம் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றது. அங்கிருந்து வங்கி அதிகாரி விஜய் யாசம் மற்றும் குடும்பத்தினர் 2 பேர் மேலும் ஒரு டாக்டர், நர்ஸ் மொத்தம் 5 பேருடன் ஏர் ஆம்புலன்ஸ் இந்தியா புறப்பட்டது. 2 விமானிகள் ஏர் ஆம்புலன்ஸ்சை இயக்கினர். இந்த ஏர் ஆம்புலன்ஸ் மாலத்தீவு வழியாக நேற்று மாலை 6.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் 21 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 30 மணி நேரம் பறந்து 7 நாடுகள் வழியாக  இந்த ஏர் ஆம்புலன்ஸ் சென்னை வந்துள்ளது. நீண்ட தூர பயணமாக ஏர்-அம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.



Tags : Chennai ,South Africa , South Africa, Air Ambulance, Madras, Cancer Patient
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...