×

விசாகப்பட்டினம் தொழிற்சாலையில் மீதமுள்ள ஸ்டைரின் ரசாயனத்தை தென்கொரியாவுக்கு அனுப்ப வேண்டும்: முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவு

திருமலை: விசாகப்பட்டினம் தொழிற்சாலையில் மீதமுள்ள  ஸ்டைரின் ரசாயனத்தை தென் கொரியாவுக்கு அனுப்ப ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர் என்ற தொழிற்சாலையில் இருந்து சில தினங்களுக்கு முன் ஸ்டைரின் என்ற விஷவாயு கசிந்து 12 பேர் பலியாகினர். ஏரோளமானோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பிரச்னை பற்றி தாடேபல்லியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து முதல்வர் ஜெகன் மோகன், விசாகப்பட்டினத்தில் உள்ள அமைச்சர்கள், முதன்மை செயலாளருடன் காணொளி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது ,‘எல்ஜி பாலிமர் நிறுவனம் உ்ட்பட மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் 12 முதல் 13 டன் ஸ்டைரின் இருக்கும்,’ என அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதை ேிகட்ட ஜெகன், ‘ விஷ வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மீதமுள்ள ஸ்டைரின் அனைத்தையும் சிறப்பு கப்பல் மூலம்  தென் கொரியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்,’ என உத்தரவிட்டார்.

பின்னர், விஷவாயுவால் இறந்த 12 பேரில் 8 பேரின் குடும்பத்தினருக்கான தலா 1 கோடி நிவாரணம் வங்கியில் செலுத்தப்பட்டதற்கான ரசீதை அவர்களை சந்தித்து அமைச்சர்கள் வழங்கினர்.  மற்ற 4 பேருக்கு நிவாரணம் வழங்குவதில் குடும்ப உறுப்பினர்கள் இைடயே சட்ட சிக்கல் உள்ளதால் அவர்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர்கள் தெரிவித்தனர்.

குஜராத்தில் இருந்து ரசாயனம்
விசாகப்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள விஷவாயுவின் தாக்கத்தை குறைப்பதற்கான 8.3 டன் ரசாயனம், இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் குஜராத்தில் இருந்து ஆந்திராவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இது தொடர்பாக விமானப்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில், `இந்திய விமானப்படையின் இரண்டு ஏஎன்-32 ரக விமானங்கள் மூலம் 1.1 டன் டெர்டியரி புடில்கேடிகோல், 7.2 டன் பாலிமரைசேசன் இன்கிபிட்டர்கள், கிரீன் ரிடார்டர்கள் ஆகியவை குஜராத்தில் உள்ள முந்த்ராவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன், விஷவாயு கட்டுப்பாட்டு பணியை மேற்பார்வையிட டெல்லியில் இருந்து இந்திய பெட்ரோலிய நிறுவனத்தின் இயக்குனர், மும்பையில் இருந்து ஸ்டைரின் சிறப்பு நிபுணர் ஆகியோரும்  அழைத்து வரப்பட்டனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.



Tags : Jagan Mohan ,Visakhapatnam ,factory ,South Korea , Visakhapatnam, Factory, Styrene Chemical, Chief Minister Jagan Mohan
× RELATED விசாகப்பட்டினம் துறைமுகத்தில்...