ஓமன் வளைகுடாவில் பயிற்சியின்போது விபரீதம்: தனது சொந்த கப்பல் மீதே ஈரான் ஏவுகணை தாக்குதல்: 19 ஊழியர்கள் பலி

டெஹ்ரான்: ஓமன் வளைகுடாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரான் கடற்படை, தனது சொந்த கப்பல் மீது எதிர்பாராத விதமாக நடத்திய ஏவுகணை தாக்குதலில் 19 மாலுமிகள் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாபஸ் பெற்றார். இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக  ஈரான் நாட்டு டிரோன்களை அமெரிக்காவும், அமெரிக்காவின் டிரோன்கள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஓமன் வளைகுடா  பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஈரான் கடற்படை போர்க்கப்பல்,   ஒரு இலக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஏவுகணை, டெஹ்ரானுக்கு அருகே 1270 கிமீ தொலைவில் உள்ள ஜாஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஈரான் நாட்டு கப்பலை தாக்கியது. இதில், அந்த கப்பலில் இருந்த 19 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>