×

57.61 லட்சம் மதிப்பில் அக்கம்மாபுரம் ஏரி சீரமைப்பு பணி துவக்கம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் அக்கம்மாபுரம் ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரியில் 3 மதகு, ஒரு கலங்கல் உள்ளன. இந்த ஏரி, அதே பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.  இந்நிலையில் ஏரியின் கரை, கலங்கல், மதகுகள் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடந்தது. இதனால் ஏரியை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ 57.61 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் ஏரி சீரமைப்பு பணி நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி ஆகியோர் கலந்துகொண்டு பணியை துவக்கி வைத்து, ஏரியை பார்வையிட்டனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் போந்தூர் செந்தில்ராஜன், மதுரமங்கலம் கூட்டுறவு சங்க இயக்குனர் சிங்கிலிபாடி ராமச்சந்திரன், எடையார்பாக்கம் முன்னாள் ஊராட்சி தலைவர் மூர்த்தி, பிச்சுவாக்கம் கூட்டுறவு சங்க தலைவர் பழனி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையன், செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம்,  உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், பாஸ்கரன், இளம் பொறியாளர் மார்க்கண்டேயன், உதவி பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Tags : Collector , Lake Neighborhood, Renovation work, Lector
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...