×

பழவேற்காடு அருகே 70 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் எரிப்பு

பொன்னேரி: பழவேற்காடு பகுதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். லைட்ஹவுஸ் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் கிராம மக்கள், பழவேற்காடு ஏரிக்கரையில் தங்களது படகுகளையும் மீன்பிடி வலைகளையும் வைத்துவிட்டு தங்களது பகுதிக்கு செல்வது வழக்கம்.  இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவுதலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக மீனவ மக்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பழவேற்காடு ஏரிக்கரை பகுதியில் திருமலை நகர் மீனவ மக்கள் போட்டு வைத்திருந்த சுமார் 70 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென கொழுந்துவிட்டு எரிந்தன.

இதை கண்டதும் கிராம மக்கள் ஓடிவந்து, வலைகளில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். எனினும், அந்த மீன்பிடி வலைகள் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த வலைகளுக்கு யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தகவலறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  வழக்குப்பதிவு செய்து சந்தேகிக்கப்படும் நபர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.

Tags : Pulicat. , Antique, fishing nets, flares
× RELATED சென்னை அருகே அதானி துறைமுக...