×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிரைவர் சடலம் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் புங்கத்தூரை சேர்ந்தவர் அந்தோணி (50). இவர் பொதுப்பணித்துறையின், மின்பிரிவில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை நிமித்தமாக திருமழிசை காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வந்தார். இதனையடுத்து, நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த அந்தோணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Collector ,Corpse Recovery ,Office Complex ,Driver's Corpse Recovery , Collector's office complex, driver's body
× RELATED ஆண் சடலம் மீட்பு