×

ப.சிதம்பரம் வலியுறுத்தல் வாகனங்கள், விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும்

புதுடெல்லி:  கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.  இந்நிலையில், இன்று முதல் டெல்லியில் இருந்து குறிப்பிட்ட 15 நகரங்களுக்கு மட்டும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் ரயிலை இயக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இதேபோல், சாலை மற்றும் விமான போக்குவரத்தையும் தொடங்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் செயல்படுவதற்கு இது தான் ஒரே வழியாகும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : P Chidambaram , B.Chidambaram, Vehicles, Planes, Corona, Curfew
× RELATED பிரதமர் மோடி அரசின் பழிவாங்கும்...