×

நைட் கிளப் சென்ற 24 பேருக்கு பாதிப்பு தென்கொரியாவில் 2வது ரவுண்டு...

சியோல்:  தென்கொரியாவில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 256 பேர் பலியாகியுள்ளனர். 10,909 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் தென்கொரியாவில் இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியுள்ளது. கொரோனாவின் இந்த 2வது அலைக்கு, நைட் கிளப்புகள் காரணம் என தெரியவந்துள்ளது. இங்குள்ள இடவோன் நகரில் பல்வேறு நைட் கிளப்புகள் உள்ளன. இதில் கிளப்புகள் மற்றும் 5 இரவு விடுதிகளில் தங்கியிருந்த 29 வயது நபருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து நடந்த மருத்துவ சோதனையில் நேற்று முன்தினம் மட்டும் 34 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 24 பேர் இடவோன் இரவு விடுதியுடன் தொடர்புடையவர்கள்.  தொற்று குறைந்த வந்த நிலையில் 2வது முறையாக கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதையடுத்து, எச்சரிக்கையாக இருக்குமாறு அதிபர் மூன்ஜே பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தலைநகர் சியோலில் உள்ள அனைத்து கிளப்புகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சியோலை சுற்றியுள்ள ஜியோன்கமி மாகாண நிர்வாகம் இங்குள்ள 5700 பொழுதுபோக்கு மையங்களை 2 வாரங்களுக்கு மூட உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொடர்புடைய 5 இரவு விடுதிகளுக்கு சென்று வந்ததாக 7200 பேர் கணக்கிடப்பட்டுள்ளனர். அந்த விடுதிகளுக்கு சென்று வந்தவர்கள் தங்களாகவே சோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : Nightclub , Nightclub, South Korea, Corona
× RELATED விவசாயிகள் கோரிக்கை கரூர் நகரின்...