கோயம்பேடு மார்க்கெட் சென்று திரும்பியதால் தையூர் முகாமில் தங்க வைத்த 27 வியாபாரிகளுக்கு கொரோனா: 10க்கும் மேற்பட்டோர் ஓட்டம்

சென்னை:  சென்னைப் புறநகர் பகுதிகளில் இருந்து காய்கறி வாங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட் சென்றசெங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 246 காய்கறி வியாபாரிகள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும்ன்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் அருகே தையூரில் கட்டப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் ஓய்வுக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் ஒரே நாளில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் முகாமிற்கு வந்து சோதனை முடிவு வந்தவர்களை அழைத்துச் செல்ல வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகாமின் கேட் திறக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அங்கிருந்து தப்பி வயல்வெளி வழியாக ஓட்டம் பிடித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>