×

பெட்ரோல் ஊற்றி சிறுமியை எரித்துக் கொன்ற மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை: கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தில், ஜெயஸ்ரீ என்ற பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மாணவி ஜெயஸ்ரீ  கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து தீவைத்துக் கொளுத்தியது கொடூரச் செயல். இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த்: 14 வயது சிறுமியின் கைகளை கயிற்றால் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவத்தை கேள்வியுற்று, மிகவும் மனவேதனை அடைந்தேன். இனி இதுபோன்ற செயல்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் அந்த மனித மிருங்கங்களுக்கு, உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. கடந்த 10ம் தேதி எரித்து கொல்லப்பட்டார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க வேண்டும்.

பாஜ தலைவர் முருகன்: மாணவி ஜெயஸ்ரீ  பட்டப்பகலில் சமூக விரோதி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப் பட்டிருக்கிறார். கைதானவர்களின் வயது 51 மற்றும் 60 எனத் தெரிகிறது. வயது முதிர்ந்தும் சிந்தனை முதிராக மிருகங்களாய் நடந்துள்ளனர். எனவே தமிழக அரசு இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

Tags : death ,party leaders , etrol, girl, hanging, party leaders
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...