×

பாதிக்கப்பட்ட இந்தியர்களை அழைத்து வந்த சிறப்பு விமானத்தில் குடும்பத்துடன் தப்பி வந்த மோசடி நிதி அதிகாரி

துபாய்: கர்நாடகாவை சேர்ந்த டாக்டர் பி.ஆர்.ஷெட்டி. துபாயில் மிகப்பெரிய தொழிலதிபரான இவர், என்எம்சி ஹெல்த் நிறுவனர். இதுதவிர, பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இவர் மிக நெருக்கமானவர் எனவும், ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 2018ல் நடந்த நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு இவர் முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசு இவருக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்துள்ளது.  இந்நிலையில், இவரது எம்என்சி ஹெல்த் நிறுவனம் 660 கோடி டாலர் (சுமார் ₹50,160 கோடி) கடனில் மூழ்கியது. இதில் 400 (சுமார் ₹30,400 கோடி) கடன் மோசடி விவகாரம் சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிறுவனத்தின்  மோசடி தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால், பி.ஆர்.ஷெட்டி, கடந்த பிப்ரவரி மாதமே இந்தியாவுக்கு வந்து விட்டார். இதனால், இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான சுரேஷ் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடைபெற்று வந்தது.  இந்நிலையில், அரபு நாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்ட அபுதாபி - கொச்சி சிறப்பு விமானத்தில், சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி தனது குடும்பத்தினருடன் 6 பேருடன் தப்பி வந்து விட்டார். இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  அப்பாவி இந்தியர்கள் அங்கு ஆதரவற்று தவித்து வரும் நிலையில், அவர்களுக்கான விமானத்தில் விசாரணை அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி தப்பி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு மட்டுமின்றி இவரது குடும்பத்துக்கே விமானத்தில் இருக்கை ஏற்பாடு செய்ய இந்திய அதிகாரிகள் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.Tags : officer ,Indians , Indians, fabulous flight, fraudulent financial officer
× RELATED எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க...