×

ஊரடங்கு நேரத்தில் இரவில் 2வது திருமணம் செய்த தயாரிப்பாளர்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் தில் ராஜு. இவர் தயாரித்த தில் என்கிற படம் பெரிய வெற்றி பெற்றதால் தில்ராஜு என்றே அழைக்கப்படுகிறார்.  ஆர்யா, பத்ரா, பொம்மரில்லு, முன்னா, பிருந்தாவனம், மிஸ்டர் பெர்ஃபக்ட், ஃபிடா, ஜானு உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தில் ராஜுவின் முதல் மனைவி கடந்த 2017ம் ஆண்டு மரணம் அடைந்தார்.  49 வயதாகும் தில்ராஜு  நேற்று முன்தினம் இரவு தனது குலதெய்வ கோவிலில் எளிய முறையில் 2வது திருமணம் செய்து கொண்டார். மணமகள் யார் என்கிற விபரத்தை அவர் வெளியிடவில்லை.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது உலகமே தன்னுடைய இயக்கத்தை நிறுத்தியுள்ள இந்த வேளையில், நம்மில் பலருக்கு தொழில்ரீதியாக எதுவும் சிறப்பாக இல்லை. இப்போதைக்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்வும் மகிழ்ச்சிகரமாக இல்லை. ஆனால் விரைவில் அனைத்தும் நல்லபடியாக சரியாகும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கை தரும் உற்சாகத்துடன், ஒரு புதிய தொடக்கமாக என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் மீண்டும் துவங்குகிறேன்.


Tags : producer ,curfew , Curfew, th marriage, producer
× RELATED விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈஷா...