×

வெளிநாட்டில் நடுரோட்டில் டான்ஸ் ஆடிய ஸ்ரேயா: அதிகாரிகள் நடவடிக்கை?

ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் நடித்தவர் ஸ்ரேயா சரண், மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரீ கோச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் வசித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு இவரது கணவருக்கு கொரோன வைரசின் ஆரம்பநிலை கண்டுபிடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் குணம் அடைந்தார்.இந்த நிலையில் ஸ்ரேயாவும், அவரது கணவரும் பார்சிலோனா நகரின் சாலையில் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு எதையும் அணியாமல் நடுரோட்டில் ஆட்டம் போட்டனர். தான் நடித்த மழை படத்தில் இடம்பெற்ற “நீ வரும்போது நான் மறைவேனா...”

என்ற பாடலுக்கும், நாட்டுப்புற பாடல் ஒன்றுக்கும் ஆடினார். ஸ்ரேயா ஆடும்போது அவரது கணவரும், கணவர் ஆடும்போதும் ஸ்ரேயாவும் செல்போனில் படம் பிடித்துள்ளனர். சாலை ஆள்நடமாட்டம் இன்றி இருக்கிறது. இந்த வீடியோவை ஸ்ரேயா தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு டான்ஸ் மாஸ்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாஸ்க் அணியாமல் ஸ்ரேயா நடனம் ஆடியிருப்பது அந்த நாட்டு சட்டப்படி குற்றமாகும். இந்த வீடியோவை அந்த நாட்டு அதிகாரிகள் பார்க்க நேர்ந்தால் ஸ்ரேயா மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்கிறார்கள்.

Tags : Shreya ,dance season , Overseas, Dance, Shreya
× RELATED ராஜமவுலியின் படத்தில் ஸ்ரேயா