×

ஊர்காவல் படையினருக்கு உணவுப்படி விநியோகம்

நெல்லை: ‘தினகரன்’’ செய்தி எதிரொலியாக தமிழகத்தில் ஊர்காவல் படையினருக்கு நேற்று உணவுப்படி வழங்கப்பட்டது. இருப்பினும் இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் காவல்துறைக்கு உறுதுணையாக ஊர்காவல் படை வீரர்கள் 14,700 பேர் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையினர் செய்யும் பல்வேறு பணிகளை ஊர்காவல் படையினர் இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் போலீசாரின் வாகன சோதனைகள் மற்றும் ரோந்து பணிகளில் ஊர் காவல் படையினரும் அதிகளவில் பங்காற்றி வந்தனர். கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு போடப்பட்ட நிலையில், மாதத்தில் 20 நாட்கள் அவர்களுக்கு பணி வழங்க அரசு உத்தரவிட்டது.

ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு உணவுப்படியாக 150 வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா தொடங்கிய நாளில் இருந்து அவர்களுக்கு ஊதியமும், உணவுப்படியும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ‘தினகரனில்’’ நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்நிலையில் ஊர் காவல் படையினரின் வங்கி கணக்கில் நேற்று உணவுப்படிக்கான தொகை ஏற்றப்பட்டது. இதனால் ஊர்க்காவல் படை வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் அவர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. கொரோனா காலங்களில் களப்பணியாற்றும் போலீசாருக்கு ஏற்கனவே உணவுப்படி வழங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Kayts Guards , Kayts, Dinakaran, Food Distribution
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி