×

லாக்-டவுனால் ஊருக்கு செல்ல முடியவில்லை; திருவனந்தபுரத்தில் சிக்கிய யானை, பாகன்: 2 மாதங்களுக்கு பிறகு பாஸ் கிடைத்தது

திருவனந்தபுரம்: லாக்-டவுன் காரணமாக திருவனந்தபுரத்தில் சிக்கிக்கொண்ட யானை மற்றும் பாகன் சொந்த ஊர் செல்ல 2 மாதங்களுக்கு பிறகு தற்போது பாஸ் கிடைத்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே ஈராற்றுப்பேட்டை  பகுதியை சேர்ந்தவர் முகமது. காவேரி என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். ேகாயில் திருவிழாக்கள், மரத்தடிகளை தூக்க யானையை வாடகைக்கு விட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யானையை, திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியில் உள்ள  ஒரு மர அறுவை மில்லுக்கு அனுப்பி இருந்தார். யானையை பாகன் கோபால கிருஷ்ணன் அழைத்து சென்றார்.

மரத்தடிகளை தூக்கிய பணி முடிந்து, அருகில் உள்ள 2 கோயில் விழாக்களுக்கும் காவேரி யானை அழைத்து செல்லப்பட்டது. இந்த  நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென லாக்-டவுன் அமலுக்கு வந்தது. கோயில் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கோயில்  வளாகத்திலேயே யானையும், பாகனும் தங்கினர். ஆகவே யானையை ஈராற்றுப்பேட்டைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  போலீசாரிடம் அனுமதி கோரியும் கிடைக்கவில்லை. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யானைக்கும், பாகனுக்கும் தினமும் உணவு அளித்து வந்தனர்.

இந்த நிலையில் யானை மற்றும் பாகன் லாக்-டவுனால் சிக்கி இருப்பது குறித்த தகவல் ஆற்றிங்கல் எம்எல்ஏ  சத்தியனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது ஏற்பாட்டின்படி, யானை மற்றும்  பாகன் சொந்த ஊருக்கு செல்ல பாஸ் கிடைத்தது. நேற்று எம்எல்ஏ சத்தியன் அந்த பாஸை பாகன் கோபால கிருஷ்ணனிடம்  வழங்கினார். இதையடுத்து இன்று யானையை பாகன் சொந்த ஊருக்கு அழைத்து  சென்றார்.

Tags : Lock-down ,town ,Elephant ,Thiruvananthapuram ,pass ,Bagan , Lock-down, Trivandrum, Elephant, Pagan, Pass
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்