×

விழுப்புரத்தில் எரித்துக்கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் அருகே எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே 10ம் வகுப்பு படிக்கும் 15வயது சிறுமி முன்பகை காரணமாக உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்கள் கலிய பெருமாள் மற்றும் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் மரண வாக்கு மூலம் அளித்த போது, எப்படி தன்னை கவுன்சிலர் முருகனும் கலிய பெருமாளும் தீ வைத்து எரித்தார்கள் என்பது பற்றி கூறியிருந்தார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள், முருகன் ஆகிய இருவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கொலைச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் கண்டனம்

விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம்; கொலைச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் - சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Tags : Palanisamy ,incident ,Villupuram , Palanisamy , little girl, sponsored , chief minister
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...