×

விழுப்புரம் சிறுமி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்க : மாவட்ட ஆட்சியருக்கு NCPCR உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரம் சிறுமி அதிமுக பிரமுகரால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அத்துடன்  
7 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீ நேற்று எரித்துக் கொள்ளப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.கவைச் சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இரு குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக விழுப்புரம் சிறுமி கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர செய்த நிலையில் இதுகுறித்து தானாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விவகாரத்தை குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்ப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 7 நாட்களுக்குள் விசாரணை செய்து ஆணையத்திடம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது



Tags : Villupuram ,burning incident ,NCPCR , Villupuram, girl, incident, investigation, report, filing, district collector, nCPCR, directive
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...