×

கொரோனாவில் இருந்து மீண்ட சிறப்பு உதவி ஆய்வாளர்; உடன் பணிபுரிவோர் நலம் விசாரிப்பு...கை தட்டி ஊக்குவித்த தெருவாசிகள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 7 ஆயிரத்து 204 பேர் பாதிப்படைந்து உள்ளனர். தலைநகர் சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த கொடிய கொரோனா வைரஸ் மூலம் பல்வேறு போலீசார் பாதிக்கப்பட்டனர்.

அந்த வகையில் திருமங்கலம் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.தசரதன் கடந்த மே 1-ம் தேதி அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் KMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு உடல்நலம் முன்னேற்றம் அடைந்து கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் அண்ணா நகர் மாவட்டம் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் திரு.லோகநாதன் வீட்டிற்கு திரும்பிய அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் சென்றுள்ளார். மேலும் அவருடன் பணிபுரியும் காவலர்கள் அவரை கௌரவிக்கும் விதமாக நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்தனர். அப்போது அத்தெருவில் வசிக்கும் மக்கள் இதை பார்த்து கைகளைத் தட்டி ஊக்குவித்தனர்.

Tags : Special Assistant Inspector ,Recoveries ,co-workers ,Corona ,Special Assistant Inspector of Recoveries , Corona, special assistant inspector, welfare inquiry
× RELATED நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில்...