×

ரயில் பயணிகளுக்கு கம்பளி வழங்கப்படாது : பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி : பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக முடங்கி கிடந்த பயணிகள் ரயில் சேவைகளை படிப்படியாக மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஆரம்ப கட்டமாக 15 ஜோடி ரயில்களுடன் பயணிகள் ரயில் நடவடிக்கைகள் மே 12 முதல் தொடங்க உள்ளது இந்திய ரயில்வே. புதுடெல்லி நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த ரயில்கள் நாட்டின் 15 முக்கிய நகரங்களை இணைக்கும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட உள்ளது.

இந்நிலையில் பயணிகள் ரயில் இயக்கம் தொடர்பான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ளவை பின்வருமாறு..

*சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பின்பற்றி ரயில்களை இயக்கிட வேண்டும்.

*ரயில் நேரம், புக்கிங் வழிமுறைகள், பயணிகள் விவரம் உள்ளிட்டவற்றை வெளியிட வேண்டும்.

*பயணச் சீட்டு உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில்களில் அனுமதிக்கப்படுவார்கள்.அவர்களுக்கு முழுமையான பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

*ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.

*மேலும் ஒவ்வொரு ரயில் பயணிகளும் சமூக இடைவேளியை பின்பற்ற வேண்டும்.

*ரயில் நிலையத்திற்கு வரும் போது கொரோனா அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்த பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

*முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவிதம் கட்டணத்தில் பிடித்தம் செய்யப்படும்.
பயணிகள் சிறப்பு ரயிலில் தட்கல் முன்பதிவு கிடையாது.

*ரயிலில் வழங்கப்படும் உணவிற்கான தொகை டிக்கெட்டுடன் வசூலிக்கப்படாது.

*ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு படுக்கை விரிப்பு மற்றும் கம்பளி போர்வை வழங்கப்படாது.

*ரயில் நிலையத்தின் நுழைவாயிலிலும், ரயில் பெட்டிகளிலும் பயணிகள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்துக கொள்ள வேண்டும்.


Tags : rail passengers ,government ,Central , Rail, Passenger, Wool, Not Supplied, Instructions, Issued, Federal Government
× RELATED நாடு முழுவதும் உடற்பயிற்சி...