×

உலகம் முழுவதும் பிரபலமாகிறது பிளாஸ்மா சிகிச்சை: கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பது மீண்டும் நிரூபணம்

போபால்: கொரோனா பாதிப்புகளை குணப்படுத்தும் பிளாஸ்மா சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிகள் தொடரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 2 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களை நிமோனியா, மூச்சுத்திணறல் போன்றவை படுத்த படிக்கையாக்கி விடுகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் ரத்த பிளாஸ்மா மூலமாக இதற்கு தீர்வு கண்டுள்ளனர் மருத்துவர்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனானால் பாதிக்கப்பட்ட இருவருக்கு பிளாஸ்மாவை கொடுத்து காப்பாற்றியிருக்கிறார் மருத்துவர் ஒருவர்.

தானமாக பெறப்பட்ட பிளாஸ்மாவை பாதிக்கப்பட்ட இருவர் உடலில் செலுத்தி போபாலில் உள்ள அரவிந்த மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆச்சரியம் பெரும் விதத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த் இருவரும் ஒரே வாரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்த சோதனை மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் நிமோனியா, மூச்சுத்திணறல் போன்ற நோய்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளித்துள்ளது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகார பூர்வமாக ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னர் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதே சிறப்பு என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிளாஸ்மா சிகிச்சை குறித்து மருத்துவர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இந்த சிகிச்சை முறை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை குறித்து பல ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும் இறுதி முடிவு வெளியாகும் முன்பே பெரும்பான்மை மௌர்த்துவர்களின் ஆதரவை பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Plasma Therapy, Corona
× RELATED DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில்...