×

சித்த மருந்துகள் உதவியுடன் 20 நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்படாத சிவகங்கை; மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கை

சிவகங்கை: சிவகங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் கடந்த 20 நாட்களாக புதிய கொரோனா தொற்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு 500, 600 என்று அதிகரித்து கொண்டு செல்கிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா தாக்கம் கொடூரமாக உள்ளது. இந்நிலையில் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும் மறுபுறம் குணமடைந்து செல்வோரின் எண்ணிகையும் அதிகரிக்கிறது.

பல மாவட்டங்களில் கொரோனா பாதித்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்த அனைவரும் குணமடைந்துள்ளனர். மேலும் 20 நாட்களாக மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில், நோயை தடுக்கும் விதமாக முதலில்  கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும்,  ஓராக் டீ எனும் சித்த மருந்துகள் அடங்கிய டீயை பருகக் கூறினர். இதில் கிஸ்மிஸ் பழக் கொட்டை, நாட்டு மாதுளை விதை, சுருள் பட்டை,  ஓமம், சீரகம், மஞ்சள், கிராம்பு, அதிமதுரம், கோக்கோ பவுடர் அனைத்தும் கலந்திருக்கும். இந்த டீ அதிகளவில் கொடுக்கப்பட்டன.

இந்த டீ மனிதனின் இதயத்தை பலப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். சிவகங்கை நகரில் உள்ள 27 வார்டுகளிலும் 45 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். முதலில் நிலவேம்பு கசாயம், பின்னர் கபசூர குடிநீர் என இந்த மருந்துகள் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டது. இந்த ஓரக் டீ, விநியோகத்தை  சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் இன்று காலை முதல் வழங்கி வருகிறார். நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களும்  சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த கசாயத்தை அருந்தினர். மேலும் சுகாதாரத்துறையினர் காவல்துறையினருக்கும் இந்த கசாயம் வழங்கப்பட்டது.

Tags : district administration ,administration ,District ,Sivaganga , Paranoia, corona, sivaganga, action
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...