×

சீனாவில் இருந்து இறக்குமதியான ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் : அசாமில் இதுவரை சுமார் 13,000 பன்றிகள் உயிரிழப்பு

டிஸ்பூர் : நாட்டிலேயே முதன் முறையாக அசாம் மாநிலத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூவுக்கு, இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.தற்போது அசாமில் பன்றிகளை அழிக்காமல் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலில் இருந்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அஸ்ஸாமில் பன்றிகளின் உயிரிழப்புக்குக் காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்துதான் பரவியது. இது அருணாசலப் பிரதேசத்தில் முதலில் தாக்கியது. இதனைத் தொடர்ந்து அஸ்ஸாமில் இப்போது பன்றிகளை கொல்கிறது. இந்த வைரஸுக்கும் கொரோனா வைரஸுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொல்லக் கூடியது இந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் வைரஸ்.

 இந்தியாவில் அஸ்ஸாமில்தான் முதன் முறையாக இந்த ஆப்பிரிக்கா பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த காய்ச்சலால் அசாமில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அதுல் போரா காஸிரங்கா தேசிய பூங்காவுக்கு சனிக்கிழமை சென்று, அங்குள்ள காட்டுப்பன்றிகள் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதன் பின்னா் பேசிய அவா், ‘காட்டுப் பன்றிகள் அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், வீட்டுப் பன்றிகள் பூங்காவுக்குள் நுழையாமல் இருக்கவும் பூங்காவுக்குட்பட்ட அகோரடோலி சரகத்தில் 6 அடி ஆழத்திலும், 2 அடி அகலத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவலை தடுக்க பன்றிகளை உடனடியாக கொல்ல வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது’ என்றாா்.

Tags : African ,China ,Assam , African swine flu, virus, Assam, pigs, lethality, humans
× RELATED ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியாது...