×

விலை கடும் வீழ்ச்சி தோட்டத்திலேயே வீணாகும் தக்காளி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால், அவை தோட்டத்திலேயே அழுகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஆலப்பட்டி, ராயக்கோட்டை, சூளகிரி பகுதிகளில் பரவலாக தக்காளி சாகுபடி செய்யட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளி ஆந்திராவிற்கும், தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக, ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மார்க்கெட்டிற்கு மொத்த வியாபாரிகள் நேரடியாக வந்து, தக்காளியை கொள்முதல் செய்து எடுத்து செல்கின்றனர்.

இதற்கான ராயக்கோட்டையில் 50க்கும் மேற்பட்ட கமிஷன் மண்டிகளும் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில், தற்போது தக்காளி கிலோ ₹4 முதல் ₹5 வரை மட்டுமே விற்பனையாகிறது. மேலும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டோல்கேட்டில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதால், அறுவடை கூலி கூட கட்டுப்படியாகவில்லை என விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுவிட்டனர். இதனால் தக்காளி செடிகளிலேயே அழுகி வீணாகி வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : garden , Falling tomatoes , garden ,expensive
× RELATED தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் புதிய மண் கொட்டும் பணி மும்முரம்