×

அத்தியாவசிய ஊழியர்கள் சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய கனடா பிரதமர்! :குறைந்தபட்ச ஊதியமே ரூ. 1.35 லட்சமாம்!!

கனடா : கனடாவில் அத்தியாவசிய ஊழியர்களுக்கான மாத சம்பளத்தை எதிர்பாராத அளவு அதிகரித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடா நாடு முழுவதிலும் இருக்கும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உயர்த்தியதோடு, நாட்டை வழி நடத்துவதற்கு நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பணையம் வைத்து போராடுகிறீர்கள். ஆனால் குறைந்த ஊதியம் பெற்று வருகிறீர்கள். நீங்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள்,என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ட்ரூடோ அரசு மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் ஒரு ஒப்பந்தம் கொண்டுவந்துள்ளது. 3 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டம் இது. அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை மாதத்திற்கு 1,800 டாலருக்கும் குறைவாக இருக்க கூடாது என்னும் வகையில், இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது, 1,35,963 ரூபாய் அளவுக்கானது.

இதுகுறித்து ஹெல்த்கேர் சங்கத்தின் தலைவர் ஷர்லீன் ஸ்டீவர்ட்கூறுகையில், “பிரதமரின் அறிவிப்பு கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அறிவிப்பு செயல்பாட்டுக்கு வருவதை ஊழியர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.  கொரோனா  பிரச்சினையால் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மூன்று சுகாதாரப் பணியாளர்கள் மரணமடைந்து விட்டனர். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது பிரச்சினையாக இருந்து வருகிறது என தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அறிமுகம் செய்துள்ள கனடா பிரதமரின் உத்தரவு பிற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகும். அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்யும் நாடுகளுக்கு மத்தியில், கனடா முன்னுதாரணமாக திகழ்கிறது. பிற நாடுகளும் இதிலிருந்து பாடம் கற்கலாம்.

Tags : Canada , Essential Staff, Salary, Action, Promotion, Canada, Prime Minister
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்