×

ரயில் போக்குவரத்தைப் போல பஸ், விமான சேவைகளையும் தொடங்க வேண்டும் : ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை :  ரயில் போக்குவரத்தைப் போல பஸ், விமான சேவைகளையும் தொடங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் வரும் 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனிடையே லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து 15 நகரங்களுக்கு முதல் கட்டமாக பயணிகள் ரயில் போக்குவரத்து இயக்கப்பட உள்ளது. இது படிப்படியாக முழுமையான நிலைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன். இதே போன்று பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும்.பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் உண்மையிலேயே தொடங்க வேண்டுமென்றால், பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம்,இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Tags : Chidambaram , Rail, Transport, Bus, Aviation, P Chidambaram, Emphasis
× RELATED பஸ் மீது மோதி இறந்த மயில்