×

சாலையோரம் வசித்த முதியவர் பலி: கொரோனா பீதியால் சடலத்தை மீட்க அதிகாரிகள் தயக்கம்

சென்னை: மயிலாப்பூர் சாந்தோம் சர்ச் அருகே ஆதரவற்ற முதியவர் தங்கப்பன் தனது மனைவியுடன் நடைபாதையில் வசித்து வந்தார். வறுமையில் தவித்த இவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தினமும் உணவு வழங்கி வந்தனர். இந்நிலையில் தங்கப்பன் நேற்று காலை தூக்கத்திலேயே இறந்தார். இதை பார்த்து அவரது மனைவி அழுது கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் கொரோனா அச்சம் காரணமாக மாலை 4 மணி வரை சடலத்தை மீட்க வரவில்லை.

இதையடுத்து, மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு  வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், ஆதரவற்ற மூதாட்டிக்கு தேவையாக உதவிகளையும் செய்தனர். இறந்த முதியவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : corona panic , Old man kills, corona, corpse, authorities hesitate
× RELATED கொரோனா பீதியில் விமான நிலைய ஊழியர்கள்:...