×

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனிமை வார்டு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருவொற்றியூர்: எண்ணூர் நேதாஜி நகர் காசி கோயில் குப்பம் பகுதியில் 9 கோடி செலவில் 125 மீனவ குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டபட்டுள்ளது.  இங்கு, சிலருக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த வீடுகளில் குடியேற இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை கண்காணிக்கும் வகையில் இந்த கட்டிடத்தை தனிமை வார்டாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், தனிமை வார்டு அமைக்கும் பணியை கைவிடுவதாக கூறினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : protests ,Ward ,Cottage Transition Board Apartments Cottage Transition Board Apartments , Cottage replacement board residence, isolation ward, public protest
× RELATED திருத்துறைப்பூண்டி 17வது வார்டு...