×

மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் 2 எஸ்ஐக்களுக்கு கொரோனா

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் பணிபுரியும் 2 எஸ்ஐகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் மூலம் இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம், என்று கூறப்படுகிறது.
இதனால், காவல் நிலையத்தை சீல் வைக்கவும், இங்கு பணிபுரியும் சக காவலர்களை பரிசோதனை செய்யவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  ஆலந்தூர்: பரங்கிமலையில் உள்ள போலீஸ் கேன்டீனில் பணியாற்றிய ஆயுதப்படை போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதேபோல், பழவந்தாங்கல் பி.வி.நகரில் 2 வாலிபர்களுக்கும், மடிப்பாக்கத்தில் 2 பேருக்கும், நந்தம்பாக்கத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாம்பரம் : தாம்பரம், திருவள்ளுவர்புரம் முதல் தெருவை சேர்ந்த 39 வயது பெண், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் 6வது குறுக்கு தெருவை சேர்ந்த 52 வயது டிரைவர், மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் 3வது தெருவை சேர்ந்த 32 வயது ஆண், மேற்கு தாம்பரம் கன்னடபாளையம் தேவசகாயம் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த 50 வயது பெண் ஆகியோருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Tags : Madavaram ,Corona ,Milk Dairy ,paalpannai , Madavaram, paalpannai Police Station, Corona
× RELATED பாலியல் ரீதியாக உயரதிகாரி தொந்தரவு:...