×

ஐசிஎம்ஆர் விதியை பின்பற்றி கொரோனா வைரஸ் சோதனை: பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை செயலாளர்

* தமிழகத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி விட்டது. நமக்கு என்ன வழிகாட்டி நெறிமுறை இருக்கிறதோ, யாருக்கு பரிசோதனை எடுக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவர்களுக்குதான் பரிசோதனை செய்து வருகிறோம்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்கனவே தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளன. இருப்பினும், தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதலாக 20 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், படுக்கை வசதிகளுடன் வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் செய்து கொடுத்து தயாராக வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை விட கூடுதலாகவே தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனிமைப்படுத்துதல் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா  லேசான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்வது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே தெளிவாக ஊடகங்களில் கூறியுள்ளார். அதில், ‘கொரோனா லேசான அறிகுறி இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர் ஆலோசனை வழங்கியுள்ளது. அதன்பேரில் தான் வீட்டு கண்காணிப்பு என்றாலும் கூட சில நிபந்தனைகள்படி தான் தனி அறை போன்றவை உள்ளதா என்று ஆய்வு செய்துதான் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

வீட்டு கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கொரோனா ெதாற்றை தடுக்கும் வகையில் கிட் ஒன்று வழங்கப்படுகிறது. அதில் தனிமைப்படுத்தி கொள்பவர்கள் என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜிங்க் பிளஸ் விட்டமின் சி மாத்திரைகள், ஆயுஷ் துறை பரிந்துரை செய்த ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது என்பது தொடர்பாக அமைச்சர்  தெளிவாக கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  2 லட்சத்தை தாண்டி விட்டது.  நமக்கு என்ன வழிகாட்டி நெறிமுறை இருக்கிறதோ, யாருக்கு பரிசோதனை எடுக்க வேண்டும் என்று இருக்கிறதோ அவர்களுக்குதான் நாம் பரிசோதனை செய்து வருகிறோம்.

இதன்மூலம்தான் கோயம்பேடு மார்க்கெட் மூலம் 1900 பேருக்கு  கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை செய்துள்ளோம்.   ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படிதான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா நோயாளிகளுக்கு பரிசோதனை  செய்வது தொடர்பாக ஐசிஎம்ஆர் விதியை பின்பற்றிதான்  சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்துவது தொடர்பாக தற்போது எந்த அறிவிப்பும் தரவில்லை. அவர்கள் கூறும் அறிவுரையை ஏற்று நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்.

Tags : Beela Rajesh ,Coronavirus test ,ICMR , ICMR, Coronavirus, Beela Rajesh, Health Secretary
× RELATED இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு...