×

அரசு செயல்பாட்டில் உண்மை தன்மை இல்லை: டாக்டர் சரவணன், திமுக எம்எல்ஏ

*தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு போதுமான அளவுக்கு இல்லை. தினமும் அறிக்கை விடுவதிலும் வெளிப்படை தன்மை இல்லை. பல இடங்களில் கொரோனா உயிரிழப்பை கணக்கில் காட்டாமல் உள்ளனர்.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கை பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவித்து இருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மசோதாவை நிறைவேற்றுவதற்காக கூட்டத்தொடரை  நடத்தி விட்டு அதன் பிறகு தான் ஊரடங்கு ெதாடர்பான நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். அந்த தாமதம் காரணமாக தான் தமிழகத்தில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9ம் தேதி சட்டசபை தொடங்குகிறது. நான் முதல் ஆளாக முககவசம் அணிந்து சட்டசபைக்கு செல்கிறேன். அப்போது, திமுக சார்பில் கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்தோம். ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், நோயாளிகளை தவிர்த்து வேறு யாரும் மாஸ்க் அணிய வேண்டியதில்லை என்று கூறினார்.  

எனவே அனைவரும் மாஸ்க் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டசபையில் பேசினேன். அப்போது அவர்கள் மறுத்தார்கள். ஆனால், இப்போது தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத தொற்று அழிய 40 நாட்கள் நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும். மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் இப்போது 40 நாட்களை கடந்து சென்று ெகாண்டிக்கிறோம். இந்த காலகட்டத்தில் நோயாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும். தமிழகம் இப்போது 3வது கட்டத்தில் உள்ளது. ஆனால், அதை அரசாங்கம் ஒத்துக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பும் போதுமான அளவுக்கு இல்லை. தினமும் அறிக்கை விடுவதிலும் வெளிப்படை தன்மை இல்லை. மதுரையில் கொரோனாவுக்கு 30 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் 40 பேர் உயிரிழந்ததாக காட்டுகிறார்கள். இதே போன்று தான் மற்ற ஊரிலும் கொரோனா உயிரிழப்பை கணக்கில் காட்டாமல் நிமோனியா அல்லது ஏதாவது ஒரு பிரச்னையை சொல்லி கணக்கு காட்டியிருக்கலாம்.
அறிவியலை பொறுத்தவரை மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்று ஒன்று இருக்கிறது. அதன்படி 60 சதவீதம் பேருக்கு இந்த நோய் சென்று சேர வேண்டும். மக்களை பாதித்தால் அவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இது, மனிதர்களை பாதுகாக்கும் என்கிறார்கள்.  

நோய் எதிர்ப்பு சக்தியை நம்பி தற்போது இவர்கள் ஏதோ செய்கிறார்கள். அதே நேரத்தில், நோய் எதிர்ப்பு உருவாகுமா என்பது தெரியவில்லை.
தற்போது கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்று அரசு கூறியுள்ளது. ஆனால், தமிழகத்தில் 60 சதவீதம் பேர் தனிமைப்படுத்தி இருக்க வாய்ப்பு இல்லை. எதிர்க்கட்சிகளை அழைத்து பேசியிருந்தால் அவர்கள் மூலம் அரசுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தால், இந்த நோயை கட்டுபடுத்தியிருக்கலாம். முகமது பின் துக்ளக் என்ற அரசர் ஒருவர் இருந்தார். அவர் அதிகம் படித்தவர். அவர் தலைநகரை அடிக்கடி மாற்றுவார். மக்களை படாதபாடு படுத்தினார்.

அந்த அளவுக்கு தான் தமிழக முதல்வரின் அறிக்கையும் உள்ளது. காலையில் ஒன்று சொல்கிறார். அடுத்த நாள் மாற்றி விடுகிறார். அவர்களது அறிக்கையில் நம்பகதன்மை இல்லை. பல ஐஏஎஸ் அதிகாரிகள் சேர்ந்து ஒரு திட்டம் வகுக்கும் போது, ஒரு மாதிரியான ஐடியாவாக இருக்க வேண்டும். ஆனால், அந்த மாதிரியான முடிவுகள் வரவில்லை.



Tags : DMK ,Saravanan ,government , Government function, Corona, Dr Saravanan, DMK MLA
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி