×

ஊரடங்கை தளர்த்தும்போது பாதிப்பு அதிகமாவது தவிர்க்க முடியாதது: என்.கார்த்திகேயன்

* ஒரு நோய் சமூகத்தில் பரவி அதை எதிர்ப்பதன் மூலம் அந்த நோயை ஒழித்து விட முடியும். போலியோ, காலரா எல்லாம் அப்படித்தான் ஒழிந்தது. தடுப்பூசி வருவதற்கு 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஆகலாம். அதன்பிறகே இயல்பு வாழக்கைக்கு போக முடியும்.

கொரோனா பரவுவதை கட்டுபடுத்த ஊரடங்கு போட்டு 50 நாட்கள் முடியப் போகிறது. என்றாலும் பாதிப்பு அதிகமாகி ெகாண்டே தான் இருக்கிறது. லண்டனில் 30 ஆயிரம் பேர், அமெரிக்காவில் 80 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அங்கும் ஊரடங்கு தான் போட்டிருந்தனர். ஊரடங்கு என்பது கொரோனாவுக்கு ஒரு தீர்வாகாது. ஊரடங்கை எடுக்கா விட்டால் பொது வாழ்க்கை பாதிக்கப்படும். வருமானம் இருக்காது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விடும். ஊரடங்கை தளர்த்தும்போது கொரோனா பாதிப்பு அதிகமாகும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இதற்கு தற்காலிக தீர்வு காண முடியும். கொரோனாவுக்கு தடுப்பூசி வந்தால் மட்டுமே நாம் பழையபடி அதாவது கொரோனாவுக்கு முன்பிருந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இதற்கு 2 ஆண்டுகள் வரை ஆகலாம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனாவை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கூறி இருக்கிறது.

அதில், வெளிநாடு, வெளிமாநிலத்திற்கு சென்று வந்தவர்கள், கொரோனா நோயாளிகள் உடன் தொடர்பில் இருந்தவர்கள், இவர்கள் யாருக்காவது அறிகுறி இருந்தால், அவர்கள் பரிசோதனை செய்து பார்த்து நெகட்டிவாக இருந்தால் அவர்கள் 14 நாட்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மூச்சு விட சிரமமாக இருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். சாதாரண இருமல், சாதாரண ஜூரம் எப்போதுமே இருக்கும். காலச்சூழ்நிலைகள் மாறுவதால் இப்படியொரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். எல்லா சளி, இருமல், மூச்சுத்திணறல் கொரோனாவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அந்த மாதிரியான விஷயங்கள் இருந்தால் கூட சுய தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். இந்தியாவில் பரவும் கொரோனா பாதிப்பு மூலம் இறப்பு சதவீதம் என்பது குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் 50 வயதுக்கும் மேற்பட்டவர், சீறுநீரகம், நுரையீரல் பிரச்சனை இருப்பவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நோயின் தாக்கம், நோயின் அறிகுறி இருப்பதே தெரியவில்லை. அதுவே வந்து அதுவே போய் விடும். சிக்கன் பாக்ஸ் ஒரு வைரஸ், இந்த வைரஸ் சிகிச்ைச அளித்தாலும், அளிக்கா விட்டாலும் அதுவே போய் விடும்.
 டெங்கு, சிக்கன் குனியாவுக்கு இப்போது வரை சிகிச்சை கிடையாது. காய்ச்சல் என்றால் காய்ச்சலுக்கு மாத்திரை. தட்டணுக்கள் குறைவாக இருந்தால் அதை அதிகரிக்க தான் செய்கிறோம். முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதன் மூலம் அதுவே அந்த வைரஸை அழித்து விடும்.

வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுக்க சொல்வதற்கு காரணங்கள் என்னவென்றால் மருத்துவமனையில் போதிய படுக்ைக வசதிகள் இல்லை. இரண்டாவது மருத்துவமனையில் அறிகுறி என்று சந்தேகத்தின் அனுமதிக்கப்படுபவர்கள், பாசிட்டிவ் நோயாளிகள் மூலம் தொற்று வர வாய்ப்புள்ளது. அதனால் தான் நமக்கு இருக்கிற மக்கள் தொகைக்கு பரிசோதனை செய்து பார்த்து விட்டு எதுவும் இல்லையென்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்ெகாள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல் என்றால் கூட கஷாயம், கபசுர குடிநீர் குடிப்பது, ஜூரம், தலைவலிக்கு மாத்திரை போட்டுக்கொண்டு வீட்டில் இருப்பது நல்லது.

நம்முடைய எதிர்ப்பு சக்தி அந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும். இதற்கு பெயர் சமூக எதிர்ப்பு சக்தி என்று சொல்கிறோம். ஒரு நோய் சமூகத்தில் பரவி அதை எதிர்ப்பதன் மூலம் அந்த நோயை ஒழித்து விட முடியும். போலியோ, காலரா எல்லாம் அப்படித்தான் ஒழிந்தது. இதற்கு தடுப்பூசி ஆராய்ச்சி நிலையில் உள்ளது. இந்த தடுப்பூசி வருவதற்கு 6 மாதம் முதல் 1 வருடம் வரை ஆகலாம். அதன்பிறகு தான் நாம் இயல்பு வாழக்கைக்கு போக முடியும்.



Tags : Karthikeyan , Curfew, Corona, N. Karthikeyan
× RELATED திருவண்ணாமலையில் போக்குவரத்து...