×

கலெக்டர்களுடன் நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை

சென்னை: மாவட்ட கலெக்டர்களுடன் நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளுக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. தொடர்ந்து, 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.     இந்த ஆலோசனையில் ஊரடங்கு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் விவாதிக்கப்படுகிறது.கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் பேரில் மே 17க்கு பிறகு பொது போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுமா என்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

Tags : consultation ,Chief Minister ,collectors , Chief Minister,collectors tomorrow
× RELATED தமிழகத்தில் கொரோனா பாதிப்பு...