×

குறும்பட போட்டி ஷாருக்கான் ஏற்பாடு

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களை மகிழ்விக்க ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஷாருக்கான் ரசிகர்களுக்கு வித்தியாசமான சவால் ஒன்றை விடுத்திருக்கிறார். அதாவது ரசிகர்கள் தங்களிடம் உள்ள செல்போனை கொண்டு. தங்கள் வீட்டை கதை களமாக கொண்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஓடும் ஒரு குறும்படத்தை எடுக்க வேண்டும்.
அது பயங்கர திகில் படமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஷாருக்கானை படம் பயமுறுத்த வேண்டும். வருகிற 18ந் தேதிக்குள் படத்தை ஷாருக்கானின் எஸ்.ஆர்.கே பிலிம்சுக்கு அனுப்ப வேண்டும். ஷாருக்கானை பயமுறுத்துகிற அளவிற்கு படம் எடுத்திருக்கும் ரசிகர்களை சந்திக்கிறார் ஷாருக்கான்.

அவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசும் தர இருக்கிறார். ஷாருக்கானை ரொம்பே இம்ப்ரஸ் பண்ணும் ரசிகர், ஷாருக்கான் கம்பெனியின் அடுத்த திகில் படம் இயக்கும் வாய்ப்பையும் பெறலாம். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வீட்டுக்குள் முடங்கி கிடப்பவர்களை கொஞ்சம் வேலை செய்ய வைக்கலாம் என்று நினைத்தேன். ஒரு வேடிக்கையாக, படைப்பு மற்றும் பயமுறுத்தும் வழி என்று அதை கண்டுபிடித்தேன். திகிலூட்டும் ஒரு கருவுடன் ஒரு பயங்கரமான இண்டோர் திரைப்படத்தை உருவாக்க  அழைக்கிறேன். என்னை பயமுறுத்துங்கள் பின்பு என்னை சந்தியுங்கள். என்று கூறியிருக்கிறார்.

Tags : Short competition, Shah Rukh Khan
× RELATED காவல்துறை நடத்தும் குறும்பட போட்டிக்கு நடுவரான பெண் இயக்குனர்