×

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும். பெரும்பாலான மாவட்டங்களில் 105 டிகிரி வெயில் கொளுத்தும் என்பதால் 2 நாட்களுக்கு பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்.

குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். அதனால் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 105 டிகிரிவரை வெயில் கொளுத்தும். அதனால் பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Tags : districts ,Tamil Nadu: Meteorological Department Rainfall , Tamil Nadu, 9 districts, rain
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை