×

ஏல ஒப்பந்த புள்ளி அழைப்பில் பணிகள் விவரங்களை ஏன் வெளியிடவில்லை: முதல்வருக்கு முத்தரசன் கேள்வி

சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: ஏல ஒப்பந்த புள்ளி அழைப்பில் பணிகள் விவரங்களை ஏன் வெளியிடவில்லை என முதலமைச்சர் விளக்க வேண்டும். காவிரி வடிகால் வட்டத்தில் 35 பணிகளை மேற்கொள்ள குறுகிய கால ஒப்பந்தப் புள்ளி ஏல அழைப்பு வெளியிட்டுள்ளது. இதில் பணிகள் விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் 35 பணிகளையும் ஒருங்கிணைத்து, அந்தப் பணிகளின்  மதிப்பீட்டுத் தொகையாக ரூபாய் 65 கோடி எனக் குறிக்கப்பட்டுள்ளது. 35  பணிகளின் விவரப் பட்டியலையும், ஒவ்வொரு பணிக்கும் ஒதுக்கப்படும் மதிப்பீட்டு தொகையும் பட்டியலாக வெளியிடாமல் கீழ் காவிரி வடிகால் வட்டம் மறைப்பது ஏன்?

பெரும் தொகை முதலீடு செய்யும் பெரிய ஒப்பந்ததாரர்கள் அழுத்தம் காரணமா என்ற கேள்வி எழுகிறது.இவை சட்டபூர்வமாக செயல்பட்டு வரும் பாசனதாரர்கள் சங்கம் மூலம்  மேற்கொள்வது தான் பொருத்தமாகும். இதனை எல்லாம் தவிர்த்து விட்டு, பூடகமான செய்திகளில் குறுகிய கால ஒப்பந்தப் புள்ளி அழைப்பு கேட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையாக எதிர்க்கிறது. இது தொடர்பாக மாநில பொதுப் பணித்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

Tags : bidders ,CM ,Mutharasan , Bidding Point, CM, Mutharasan
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...