×

வறுமையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு வழங்காத பாஜ அரசு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: வறுமையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கி உயிரை காப்பாற்ற பாஜ அரசு முன்வரவில்லை என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.  இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: 2020ல் மக்கள்தொகை 137 கோடி ஆக உயர்ந்த பிறகு அதில் 67 சதவீதமான 92 கோடி மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உணவு தானியங்களை மத்திய பாஜ அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதில் விடுபட்ட ஏறத்தாழ 10 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு குடும்ப அட்டைகள் இல்லாதது தான் உணவு தானியங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்று மத்திய அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

கொடிய கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கவேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாக இருக்கவேண்டும். மேலும் இந்திய உணவு கழகத்தில் தற்போது 77 மில்லியன் டன் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. எனவே இந்த மக்கள் தொகை அதிகரிப்பை கணக்கில் கொண்டு கையிருப்பில் உள்ள தானியங்களை உடனடியாக வழங்கவேண்டும். இதை உடனடியாக செய்யவில்லையெனில் வறுமையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு வழங்கி உயிரை காப்பாற்ற முன்வராத அரசை, மக்கள் விரோத அரசாகவே கருதவேண்டியிருக்கும்.

Tags : government ,BJP ,KS Alagiri BJP ,KS Alagiri , People, Food, BJP government, KS Alagiri
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு