×

சொல்லிட்டாங்க...

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் உள்ளன. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை அழிக்கும் நோக்கம் கொண்டது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதுதான் மத்திய அரசின்
நோக்கமாக இருக்க வேண்டும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஊரடங்கு நாட்களை உருப்படியாக பயன்படுத்தாமல் வீணடித்து விட்டு, மக்களின் உயிரோடு விளையாட நினைக்கிறது மோடி அரசு. - விசிக தலைவர் திருமாவளவன்

Tags : Communist State of India , Mutharasan, Secretary to the Communist State of India
× RELATED சொல்லிட்டாங்க...