×

ரெடி... ஸ்டார்ட்... கோ! கோஹ்லி உற்சாகம்

ஊரடங்கு தொடங்கியதும் ஆரம்பத்தில் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால், உடல்தகுதியை பொறுத்தவரை எந்த பிரச்னையும் கிடையாது. அதிர்ஷ்டவசமாக வீட்டிலேயே பயிற்சிக்கூடம்  இருப்பதால், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய முடிகிறது. அதனால் இப்போதும் நான்  நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன். கூடவே நான் எப்போதும் என் மனநிலையை மேம்படுத்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டவன். அதுவும் எனக்கு நன்கு உதவுகிறது. நேர்மறையான சிந்தனையுடன்,  மகிழ்ச்சியுடன் உள்ளேன். நீண்ட நாட்களாக வலைப்பயிற்சி செய்யாமல், கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறேன். ஆனாலும் மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டால் என்னால் விட்ட இடத்திலிருந்து சிறப்பாக தொடர முடியும். அணிக்காக நன்றாக விளையாட முடியும்.Tags : Kohli , Kohli
× RELATED விராட் கோலி முன்னின்று அணியை...