×

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதாவுக்கு வீட்டில் சிகிச்சை

தாகா:  வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா என்று சந்ேதகம் எழுந்துள்ளது. வங்கதேச தேசிய கட்சியின் தலைவரும் பிரதமராக 3 முறை பதவி வகித்தவருமான கலீதா ஜியாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 2018 பிப்ரவரி முதல் சிறையில் இருந்தார். சிறையில் 25 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒப்புதலின் பேரில், பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், கடந்த மார்ச் 25ம் தேதி அவர் சிறையில் இருந்து நேரடியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது சகோதரி செலிமா கூறுகையில், மருத்துவ நிபுணர்கள் அவரை வாரம் ஒருமுறை பரிசோதித்து வருகின்றனர். அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்’’ என்று கூறினார்.



Tags : Khaleda ,Bangladesh ,home , Former Prime Minister of Bangladesh, Khaleda, Corona
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...