×

கோமா நிலையில் சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர்

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கோமா நிலைக்கு சென்றார்.  சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சியின் தலைவருமான அஜித் ஜோகிக்கு (74) நேற்று முன்தினம் அவரது வீட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், ஜோகியின் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு முற்றிலும் நின்று விட்டதால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் நேற்று தெரிவித்துள்ளனர். தற்போது ஜோகி வென்டிலேட்டர் மூலம் சுவாசிக்கிறார், அடுத்த 48 மணி நேரத்திற்குப் பிறகே அவரது உடல்நிலை குறித்து மேற்கொண்டு தகவல்களை தெரிவிக்க முடியும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Tags : chief minister ,Chhattisgarh , Coma, Chhattisgarh, former CM
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...