×

பாகிஸ்தானில் முதல் முறையாக 1,991 பேருக்கு கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முதல் முறையாக நாட்டில் ஒரே நாளில் 1,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 29,465 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக பஞ்சாபில் 11,093, சிந்துவில் 10,771, கைபர் பக்துங்க்வாவில் 4,509, பலுசிஸ்தானில் 1,935 பேர் பாதித்துள்ளனர். இங்கு நேற்று முதல் மாலை 5 மணி வரை கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு இந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பலுசிஸ்தானின் சாமன் பகுதியில் உள்ள பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையை ஆப்கன் அரசின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தான் திறந்து விட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஆப்கானிஸ்தான் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதுவரை 37,000 ஆப்கானிஸ்தான் குடும்பங்கள் சமான் வழியாக சென்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pakistan ,time , Pakistan, Corona, Department of Health
× RELATED திருக்கழுக்குன்றம் பகுதியில் கர்ப்பிணி உள்பட 7 பேருக்கு கொரோனா