×

செங்கல்பட்டு தொகுதியில் 7000 பேருக்கு நிவாரண தொகுப்பு : எம்எல்ஏ வரலட்சுமி வழங்கினார்

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு தொகுதியில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் 7000 பேருக்கு நிவாரண உதவி வழங்கினார். செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட  காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய காரணைபுதுச்சேரி பெருமாட்டு நல்லூர் வண்டலூர் வெங்கடாபுரம் ஆலப்பாக்கம் அஞ்சூர் கொளத்தூர் ரெட்டிபாளையம் உள்ளிட்ட 39ஊரட்சிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 7ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி,முககவசம், கிரிமிநாசினிகள் அடங்கிய தொகுப்பை மறைமலைநகரில் செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தனது சொந்த செலவில் நேற்று வழங்கினார்.  இதுகுறித்து எம்.எல்.ஏ.வரலட்சுமிமதுசூதனன் கூறுகையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

அதன் பேரில் கடந்த 45நாட்களாக தொகுதி முழுவதும் முதல் கட்டமாக  சென்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள்  நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.  இரண்டாம் கட்டமாக  கூடுவாஞ்சேரி பேரூராட்சி, செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில் 3ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக இன்று (நேற்று) காட்டாங்கொளத்தூர்  ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 7ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டில் தனித்திருக்க வேண்டும்.  கைகளை கிரிமி நாசினி போட்டு நன்கு கழுவவேண்டும் என்றார்.  இந்த நிகழ்ச்சியில் ஒன்றி யசெயலாளர் தண்டபாணி ஆப்பூர் சந்தானம் திமுக ஊராட்சி  செயலாளர்கaள் அருள்தேவி செந்தில்,தருமன், சண்முகம்,உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : MLA Varalakshmi ,Chengalpattu , Chengalpattu, Relief Package, MLA Varalakshmi
× RELATED மீனவர்களுக்கான நிவாரண தொகுப்பு மத்திய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு