×

பள்ளி வேன் டிரைவர் வெட்டி கொலை

கூடுவாஞ்சேரி:  கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னிவாக்கம் கிராமம், தர்காஸ் நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (48). இவர், சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு, மனைவி புவனேஸ்வரி (45), மகன் கோகுல் (15), மகள் லாவண்யா (12) ஆகியோர் உள்ளனர். இதில், அதே பகுதியை சேர்ந்த  பூ வியாபாரி வாசு (27) என்பவரிடம் விநாயகம் ஏற்கனவே பணம் கடனாக வாங்கியிருந்தார்.

இந்நிலையில், விநாயகம் நேற்று காலை வாசுவின் வீட்டிற்கு தனது பைக்கில் சென்று இருந்தார். அப்போது, கொடுத்த பணத்தை விநாயகத்திடம் வாசு கேட்டுள்ளார். விநாயகம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வாசு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விநாயகத்தை சரமாரியாக வெட்டினார். இதில், விநாயகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.  தகவல் அறிந்து வந்த வண்டலூர் போலீசார் விசாரணை நடத்தி வாசுவை கைது செய்தனர்.


Tags : School van driver , School van driver ,killed
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது